ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை எதிர்வரும் 2030 இல் புதிய தலைமுறையினருக்கு வழங்கும் போது அக்கட்சியின் தற்பொழுதுள்ள இளையவர்கள் வயதுக்கு சென்று விடுவார்கள் என்பதை யாருக்கும் விளக்கத் தேவையில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மக்கள் இன்று பாரியளவில் அப்பாவிகளாக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுள்ளனர். இந்த அப்பாவி மக்கள் இதனைப் புரிந்து கொள்வதில்லை. ஐக்கிய தேசியக் கட்சி கூறும் 2020 முதல் 2030 வரையான காலம் எப்படி என்று மக்கள் கருதுவதற்கு முன்னர் நல்லாட்சி அரசாங்கம் எப்படியானது என்பதை மக்கள் விளக்கத்துக்கு எடுத்து விட்டனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.