மிட்சல் ஜான்சனுக்கு தசைப்பிடிப்பு: சிட்னி டெஸ்ட்டில் விளையாட மாட்டார்

122
இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் சிட்னியில் மோதும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஜான்சன் விளையாட மாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மெல்போர்னில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஜான்சனுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து ஜான்சன் விடுபடுவார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எதிர்பார்த்தது. ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக ஜான்சன் இன்னும் தசைப்பிடிப்பிலிருந்து முழுமையாக விடுபடவில்லை. இதனால் சிட்னியில் நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அதே சமயம் அடுத்து நடக்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை மனதில் வைத்தும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது

SHARE