பாடசாலைக்குச் சென்ற ஆசிரிய தம்பதியினர் : கணவன் பலி, மனைவி காயம்

18

கல்முனை, சவளக்கடை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தொன்றில் கணவன் உயிரிழந்துள்ள நிலையில், மனைவி படுகாயமடைந்துள்ளார்.

ஆசிரியர்களாக பணியாற்றும் குறித்த தம்பதியினர், பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, பஸ் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் 41 வயதுடைய கணவன் ஞானமுத்து ஜயந்தசீலன் பலியாகியுள்ளதுடன், 35 வயதுடைய மனைவி தாட்சாயினி படுகாயமடைந்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் கல்முனைப் பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதோடு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

SHARE