இந்திய நிதியுதவியின் கீழ் 160 புகையிரதப் பெட்டிகள்

33

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவித் திட்டத்தன் கீழ் இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு 160 புகையிரத பெட்டிகள் வழங்கப்படவுள்ளன.

கடந்த 7 ஆம் திகதி ரைட்ஸ் நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கிடையில் சலுகையடிப்படை நிதியுதவித் திட்டத்தின் கீழ் இந்தியாவிடமிருந்து 160 புகையிரத பெட்டிகளை வழங்குவதற்காக சுமார் 82.64 மில்லியன் ரூபாவுக்கு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை ரைட்ஸ் நிறுவனம் பணிப்பாளர் முக்கேஷ் ராத்தோர் மற்றும் இலங்கை போக்குவரத்து மற்றம் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் விதானகே ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

SHARE