வேலன்குளம் மற்றும் மடுக்குளம் போன்ற கிராமங்களில் கந்தையா பார்த்தீபன் என்பவர் சட்டத்திற்கு முரணாக அத்துமீறிச் செயற்படுகிறார் என பொது மக்களால் முறைப்பாடு

33

(முறைப்பாட்டுக் கடிதம் 01)

வேலங்குளம் கிராம அலுவலர் பிரிவு மக்கள்,
28.05.2018,
கௌரவ, முதலமைச்சர்,
வடமாகாணம்.

கந்தையா.பார்த்தீபன் தொடர்பான முறைப்பாடு

கந்தையா பார்த்தீபன், இல – 247, 1ம் ஒழுங்கை, கதிரேசு வீதி, வைரவபுளியங்குளம், வவுனியா. என்ற முகவரியில் வசிக்கும் இவர் வேலங்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள அலியா மருதமடுக்குளத்தின் கீழுள்ள வயலில் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ளார். இவரது முறையற்ற செயற்பாடுகள், மற்றும் அரச வளங்களைத் துஷ்ப்பிரயோகம் செய்தல், அரச அதிகாரிகள் மீதும் அரச நிறுவனங்கள் மீதும் வீண் பழிசுமத்தல் போன்றவற்றால் நாம் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறோம். எனவே இவரால் எமக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கையில் ஈடுபட எமக்கு உதவுமாறு தங்களை வேண்டி நிற்கின்றோம்.
இவர் தொடர்பாக நாம் பின்வரும் விடயங்களைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

1. விவசாயச் செய்கையின் போது பின்பற்றப்பட வேண்டிய எந்த வித ஒழுங்கு முறைகளையும் பின்பற்றுவதில்லை. (வேலி, பீலி அமைத்தல் விதைப்புத் தவணைகள், நீர்ப்பாசனம்)

2. செய்கை பண்ணப்படும் வயற் காணியின் அளவை விட மிக அதிகமான அளவு செய்கை பண்ணப்படுவதாக குறிப்பிட்டு பெருந்தொகையான அளவு உர மானியத்தை நீண்ட காலமாகப் பெற்று அரச வளத்தைத் துஷ்ப்பிரயோகம் செய்து வருகின்றார்.

3. இவ்விடயங்களைச் சுட்டிக்காட்டி எதிர்ப்புத் தெரிவித்த அலியாமருதமடு கமக்காரர் அமைப்பினை தனது அரச அதிகாரிகளிடம் உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி கலைத்து விட்டு தனக்குச்சாதகமாகச் செயற்படக்கூடிய அயலில் உள்ள வேலங்குளம் கமக்காரர் அமைப்புடன் எமது குளத்தை சட்டத்திற்கு முரணாக இணைத்து செயற்படுகின்றார்.

4. கமநல சேவை நிலையத்தினால் அலியாமருதமடு வயலிற்கென ஒதுக்கப்பட்ட இரண்டு கிணறுகளையும் வேறு எந்த ஒரு அமைப்பிற்கோ, மக்களுக்கோ தெரியாமல் இவர் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் காணியில் இவரது பெயரிலும், இவருக்கு வேலை செய்பவரின் பெயரிலும் அமைத்துள்ளார்.

5. அலியாமருதமடு வயல்காணியில் இவர் பயிர் செய்யும் பின் பகுதியில் சின்னத்தம்பனைக் குளத்தின்கரையில் எவரது அனுமதியும் இன்றி ஒருபோதும் துப்புரவு செய்யப்படாத அரச காணி 15 ஏக்கரை டோசர் மூலம் அழித்து தனது காணி என வைத்துள்ளார்.

6. சின்னத்தம்பனைக் குளத்தின் நீர்ப்படுகைக்காக எல்லையிடப்பட்ட காணியைப் பிடித்து வைத்துள்ளார்.

7. இவருக்கு வேலையாளாக இருக்கும் சிவலிங்கம். சசிக்குமார் என்பவருக்கு அலியாமருதமடு குளப்படுக்கைக்குள் உள்ள காணியைப் பிடித்துக் கொடுத்து வீடு, கிணறு என்பவற்றை அமைக்கச் செய்துள்ளார்.

8. திருமதி. திருநாவுக்கரசு, யோகேஸ்வரி என்பவருக்குச் சொந்தமான 20 ஏக்கர் குள இடாப்பில் பதிவுள்ள வயற்காணியை அடாத்தாகப் பிடித்து வைத்துள்ளார். (நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.)

9. முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் அமரர் சிவசிதம்பரம் அவர்களின் 12 ஏக்கர் காணியை அடாத்தாகப் பிடித்து வைத்துள்ளார். (நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.)

10. விதவைப் பெண்ணான கிளி என்பவரின் 5 ஏக்கர் காணியை அடாத்தாகப் பிடித்து வைத்துள்ளார். வழக்குத்தாக்கல் செய்வதற்கு வசதியற்ற ஏழைகளாகக் காணப்படுவதால் வழக்குத்தாக்கல் செய்யவில்லை.

11. மடுக்குளம் காட்டுப்பகுதியில் உரிய அனுமதிகளைப் பெறாமல் பெருந்தொகையான தடிகளை வெட்டி வேலி அமைப்பதன் மூலம் காடுகளை அழித்து வருகின்றார்.

12. பல தசாப்த காலமாக நிரந்தர வதிவிடங்களைக் கொண்டவர்களாக வாழ்ந்து வரும் மலையகத் தமிழ் மக்களை இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசுவதோடு அவர்களுக்குப் பலவிதமான அச்சுறுத்தல்களையும் விடுத்து வருகின்றார்.

13. நீதிமன்றம், பொலீஸ், மாவட்டச் செயலகம், பிரதேசச் செயலகம், உட்பட அரச திணைக்களங்களின் செயற்பாடுகள் தொடர்பாக தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் கூறுவதோடு, சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டு வருகின்றார்.

இவ்வண்ணம்
உண்மையுள்ள
வேலங்குளம் கிராமசேவையாளர் பிரிவு மக்கள்

பிரதிகள்

1. கௌரவ விவசாய அமைச்சர் – வடமாகாணம்
2. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் – வன்னி
3. கௌரவ மாகாண சபை உறுப்பினர்கள் – வன்னி
4. காணி ஆணையாளர் – வடமாகாணம்
5. அரசாங்க அதிபர் – வவுனியா
6. பிரதேச செயலாளர் – வவுனியா
7. கமநலசேவை உதவி ஆணையாளர் – வவுனியா
8. நீர்ப்பாசனத்திணைக்களப் பொறியியலாளர் – வவனியா
9. கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் – வவுனியா
10. மாவட்ட வனவள அதிகாரி – வவுனியா
11. உதவி பொலிஸ் அத்தியட்சகர் – வவுனியா
12. பொலிஸ் பொறுப்பதிகாரி – பூவரசங்குளம்
13. தலைவர் – நகரசபை – வவுனியா
14. தலைவர் – வவுனியா தெற்குத் தமிழ் பிரதேச சபை
15. கிராம அலுவலர் – வேலங்குளம்

 

 

(முறைப்பாட்டுக் கடிதம் 02)

பொது மக்கள்,
மடுக்குளம்,
வேலன்குளம்.

வவுனியா,
அரசாங்க அதிபர்,
வவுனியா.

தனியாரின் அரச காணிகளை அபகரிப்பு, காடழிப்பு – அதிகாரிகளின் பாராமுகம்

ஜயா நாங்கள் வவுனியா பிரதேச செயலகத்தில் வேலங்குளம் கிராம வேவகர் பிரிவில் வசிக்கும் பொதுமக்கள் எங்களது பிரிவில் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பங்களை கொண்ட ஒரு கிராமமாகும். நீண்டகால யுத்தத்தின் பின் இடம் பெற்ற மீள் குடியேற்ற கிராமம் ஆகும். இங்கு உள்ள மக்களின் வாழ்வாதாரம் விவசாயம் ஆகும். எமது பிரிவில் கீழ்வரும் கிராமங்களில் குடும்பங்கள் வசிக்கின்றனர். சிவன் நகர் 15 குடும்பம், வேலன்குளம் 39 குடும்பம், கோவில் மோட்டை 17 குடும்பம், மடுக்குளம் 96 குடும்பம், சின்னத்தம்பனை 46 குடும்பம், செங்கற்படை 40 குடும்பம், கோயில் புளியங்குளம் 76 குடும்பம், குஞ்சுக்குளம் 16 குடும்பம் மொத்தமாக 345 குடும்பங்களைக் கொண்ட குடும்பமாகும்.

எமது வாழ்வாதாரம் மேம்படுத்த எந்தவொரு விவசாய நிலங்களும் எங்களுக்கு இல்லை. இங்கு அலியாமருதமடுகுளம் கீழ்வரும் ஏறக்குறைய 400 ஏக்கர் காணி இரண்டு குடும்பங்களால் ஆட்சி செய்யப்படுகின்றது. கதிரேசு குடும்பம் மற்றும் முன்னால் ஆ.P சிவசிதம்பரம் குடும்பம், இது அரச காணியாகும். இங்கு எந்தவிதமான தனியார் காணியும் இல்லை இதனை வரைபடம் மூலம் தாங்கள் அறியலாம். இவர்கள் கள்ள உறுதி எழுதி ஆட்சிபடுத்துகின்றனா.; யுத்தத்தின் பின்னர் கதிரேசு குடும்பத்தை சேர்ந்த கந்தையா பார்த்தீபன் அவர்கள் ஏறக்குறைய 100 ஏக்கர் காடுகளை அளித்து பெறுமதியான மரங்களை வெட்டி கொழும்புக்கு களவாக விற்றார். பெரும் அளவிலான வயல் காணிகளும் வைத்துள்ளார். ஏனைய காணிகள் குத்தகைக்கு விட்டு காசு உழைக்கின்றார். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படம் மூலம் காணி இலக்கம் 24,25,26,27 ஏறக்குறைய 85 ஏக்கர் அவரின் பெயரில் உள்ளது. தற்போது ஒரு நபர் வைத்து இருக்க கூடிய காணி 25 ஏக்கர் தனியார் காணியாகும். இது அரச காணி. அரசகாணி என்றால் ஒரு குடும்பத்துக்கு ஒரு ஏக்கர் மட்டும் வழங்க முடியும். இதற்கு உடந்தையாக நீர்பாசன திணைக்களமும் செயற்படுகின்றது. மேலும் இணைந்துள்ள படத்தில் 1-27 காணி இலக்கம் எல்லாம் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் உள்ளது. இங்கு உள்ள எங்களுக்கு வாழ்வாதாரத்துக்கு ஒரு குடும்பத்துக்கு 1 ஏக்கர் வீதம் இக்காணியை பிரித்து வழங்குமாறு தங்களை தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம். தங்களின் திறமையான நிர்வாகம் மீது சிறிய மக்கள் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்.

மேலும் திரு. பார்த்தீபன் அவர்களுக்கு செம்மலை அலம்பில் முல்லைத்தீவில் 200 ஏக்கர் தென்னம் தோட்டம் உண்டு இவரது பெயரிலேயே 300 ஏக்கருக்கு மேல் காணி உண்டு. தயவு செய்து இவற்றை ஏழை மக்களுக்கு பிரித்து வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பொதுமக்கள்
1. மாகாண காணி ஆணையாளர் – ஏழைமக்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
2. காணி சீர்திருத்த ஆணைக்குழு ஜயா 25 ஏக்கர் தனியார் காணி வைத்து இருக்கலாம். இது எல்லாம் அரச காணி இவைகளை எங்களுக்கு எடுத்து பிரித்து தரவும்.
3. கணக்காய்வு அத்தியட்சகர் – வவுனியா
4. பிரதேச செயலாளர் வவுனியா – தாங்களும் உதவவும்

(முறைப்பாட்டுக் கடிதங்கள் ஆதாரபூர்வமாக எம்மிடம் இருக்கிறது)

SHARE