விஜய் படத்துக்கு 4 டைட்டில் பதிவு 

87


 விஜய் நடிக்கும் படத்துக்கு நான்கு தலைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், சுதீப், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, கருணாஸ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் இப்போது நடந்துவருகிறது. பி.டி.செல்வகுமார், சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் பேன்டஸி பார்முலா கதையை கொண்டது. சென்னையில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட செட்டில் முதல் ஷெட்யூல் நடந்தது. அடுத்து மைசூரில் நடந்தது. இப்போது சென்னையில் தொடர்கிறது.  பிப்ரவரி மாதம் ஆந்திராவில் நடக்கிறது. இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஆனால், புலி, மாரீசன், கருடா உட்பட 4 தலைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஒன்றை பொங்கலுக்குள் முடிவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது

 

SHARE