இறுதிக் கணத்தில் நடக்கும் மர்மம்: கண்டுபிடித்து விஞ்ஞானிகள் அசத்தல்

வானியலாளர்கள் நட்சத்திரங்கள் இறப்தற்கு முன்னர் இதுவரையில் அறிந்திராத சம்பவம் ஒன்று நடப்பதை இனங்கண்டுள்ளனர்.

பொதுவாக நட்சத்திரங்கள் தமது வாழ்க்கைவட்டத்தின் இறுதியை அடைகையில் பிரளயவெடிப்புக்கு (Cataclysmic Explosion) உள்ளாகின்றது.

இதன்போது அதன் பிரகாசம் பன்மடங்காக அதிகரிக்கின்றது.

ஆனால் தற்போது மேற்படி ஒளிர்வானது விரைவாக விரிவடையும் வாயுக்களும், நட்சத்திரங்களைச் சூழவுள்ள இனம்தெரியாத பொருட்களும் ஒன்றோடொன்று மோதுவதாலேயே ஏற்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ் ஆய்வுக்கென வானியலாளர்கள் DECam கருவியைப் பயன்படுத்தி, தொடர்ந்து 14 இரவுகள் வானை அவதானித்திருந்தனர்.

இவ் DECam ஆனாது 8 பில்லியன் ஒளியாண்டு தொலைவில் கூட திறம்பட படம்பிடிக்கும் ஆற்றல் கொண்டது.

இங்கு வெடிப்புச்சம்பவம் நிகழும்போது உருவாகும் பெரும்பான்மைச் சக்தியை நட்சத்திரங்களைச் சூழவுள்ள பொருட்கள் பெற்று அதனை ஒளியாக மாற்றுவதால் அதை நம்மால் உணர முடிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

About Thinappuyal News