என் வாழ்வில் கனவு போன்ற நான்கு நாட்கள்

35

இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக் தன் வாழ்நாளில் கனவு போன்றது இந்த நான்கு நாட்களும் என்று, தனது கடைசி டெஸ்ட் அனுபவம் குறித்து தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து-இந்தியா அணிகள் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் அலெஸ்டர் குக் இந்த போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 71 ஓட்டங்கள் எடுத்த குக், இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக ஆடி சதமடித்தார். பின்னர் இது குறித்து குக் கூறுகையில்,

‘என் வாழ்நாளில் கனவு போன்றது இந்த நாட்கள். எனது மனைவி இன்று இரவு ஒரு பணியாளரைப் போல் இருப்பார் என நினைக்கிறேன். ஆனால் அது நம்பமுடியாத அளவிற்கு இருக்கும்.

இன்று நடக்கும் அனைத்திற்கும் எனது நண்பர்களில் சிலர் காரணமாக இருப்பார்கள். மேலும் கடந்த நான்கு நாட்களில் நான் ஒவ்வொரு முறை பெற்ற வரவேற்பும் நம்ப முடியாததாக இருந்தது. அதுவும் கடைசி இரண்டு ஓவர்களில் மொத்த கூட்டமும் என்னுடைய பார்மி ஆர்மி பாடல்களை பாடியது நம்பமுடியாத வகையில் சிறப்பானதாக இருந்தது.

160 போட்டிகளுக்கு பிறகு ஒரு நாளில் நான் சிறப்பாக விளையாடியிருப்பதாக நினைக்கிறேன். இது வெளியேறுவதற்கு சிறந்த தருணம். இது எனக்கான நேரம்.

இது என் குடும்பத்திற்கான நேரம் மற்றும் இது மேலும் சிறப்பாக அமைந்துள்ளது. இது வெளியேற்ற முயற்சிப்பதற்கும், சொந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளியேறுவதற்கும் சிறப்பானதாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

SHARE