கனகராயன்குளம் தாவூத் ஹோட்டல் விவகாரம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரியின் பாரபட்சம் கண்டிக்கப்படவேண்டிய விடயம் – வைத்திய கலாநிதி சி.சிவமோகன் (எம்.பி)

38

கடந்தவாரம் கனகராயன்குளம் தாவூத் ஹோட்டல் அமைந்திருக்கும் இடத்தில் அதன் காணியின் உரிமையாளர் தனது காணியில் தண்ணீர் இறைக்கச் சென்றவேளை வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டமையினாலேயே பிரச்சினைகள் பூதாகரமானதாகவும், அதன் பின்னர் குறித்த நபரின் வீட்டிற்குச் சென்று கனகராயன்குள பொலிஸ் உயர் அதிகாரியும், ஏனைய பொலிசாரும் சிவில் உடையில் சென்று குறித்த உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இத்தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் தாக்குதலுக்கிலக்காகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதியாக விசாரனை நடத்தப்பட்டு அக்காணியின் உரிமையாளருக்கு முறையான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவேண்டும். இதில் குறிப்பாக அரசியல் திரிபுபடுத்தப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. இனவாதத்தை தூண்டும் ஒரு செயற்பாடாக ஒரு சில அரசியல் தலைமைகள், அரசியல் கட்சி அமைப்பின் பிரதிநிதிகள் தேவையற்ற நடவடிக்கையில் ஈடுபடுவதன் ஊடாக குறித்த சம்பவம் தொடர்பில் உரிய நபருக்கு ஏற்ற தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியாத நிலை உருவாகும்.

வவுனியாவில் பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளான நபருக்கு கைவிலங்கு : பொறுப்பதிகாரி வெளியில் சுதந்திரமாய்

Posted by Baskaran Katheeshan on Rabu, 12 September 2018

நீதி, நியாயம் என்பன மறுக்கப்படுகின்ற போதுதான் அன்றைய காலத்தில் போராட்டங்கள் பெருவாரியாக வெடித்தது. பொலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டது. மீண்டும் அவ்வாறான ஒரு சூழ்நிலை இந்நாட்டில் ஏற்படாத வண்ணம் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். கனகராயன்குளம் பகுதியில் ஏற்கனவே பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கிறது. இவ்விடயங்களும் கருத்திற் கொண்டுவரப்படவேண்டும். இதில் பாடசாலை மாணவியும் தாக்கப்பட்டிருக்கின்றார். இவருக்கு வயிற்றில் உதைக்கப்பட்டு அதிக இரத்தப்போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த ஒரு சில அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், பொலிஸ் உயர் உதிகாரிகளுடன் விருந்தோம்பல்களிலும் மற்றும் அவர்களுக்கு மாலை அணிவதிலும் மும்முரமாக நின்றவர்கள். இன்று அவர்களும் பொலிசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும்போது அருவருப்பாக உள்ளது. ‘தன் மானத் தமிழா’ என்று கூறியவர்களும், பிரபாகரனின் மகன் என்று கூறியவர்களும் பொலிஸ் அதிகாரிகளுடன் தமது உறவை வைத்துக்கொண்டு மக்கள் மத்தியில் ஒரு விதமாகவும், வெளியில் வேறு விதமாகவும் செயற்படுகின்றனர். இச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

தனக்குச் சொந்தமான காணியின் ஒரு பகுதியை விருந்தினர் விடுதி நடாத்துவதற்காக குத்தகைக்கு கொடுத்ததும், குத்தகைக்காலம் முடிவடைந்த பின்னரும் காணியை மீள ஒப்படைக்காத விடுதி உரிமையாளர் மீது வழக்குத் தொடர்ந்ததும் சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்ட செயலே ஆகும். ஆனால் காணி உரிமையாளருக்கும், விடுதி உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை தீர்த்துவைக்கவேண்டிய பொலிசாரே அதற்கு வன்முறைவடிவம் கொடுத்து காணியின் உரிமையாளரை கடுமையாக தாக்கியதோடு அதனை தடுக்கமுனைந்த அவரது மனைவியையும், மகளையும் தாக்கியுள்ளமையும், காயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் விலங்கிடப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருப்பதும் சட்டதிட்டங்களுக்கும், மனிதாபிமானத்திற்கும் அப்பாற்பட்ட விடயமாகும்.
புனர்வாழ்வுபெற்ற ஒரு முன்னாள் போராளிக்கு நேர்ந்துள்ள இந்நிலைமையானது மிகுந்த மன வேதனையளிக்கிறது. மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தம்மையே அர்ப்பணித்து வாழ்ந்த இவர்கள் யுத்தம் முடிவுற்றதன் பின்னர் புனர்வாழ்வு பெற்று தமது குடும்பங்களுடன் இணைந்து வாழ ஆரம்பித்திருக்கும் இன்யை சூழலில் பொலிசார் இவ்வாறான சம்பவங்களை அரங்கேற்றுவது பொருத்தமானதல்ல. இச்சம்பவத்தை திட்டமிட்ட செயலாகவே கருதமுடிகிறது. பொலிசாரின் இந்த அடாவடித்தனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும்.
அதேவேளை தமிழ் பேசும் சகோதர்கள் என்ற அடிப்படையில் தமிழர்களின காணிகளை வியாபார நடவடிக்கைகளுக்காக குத்தகைக்கு எடுக்கும் முஸ்லிம் சகோதரர்கள் நியாயமற்ற முறையில் பொலிசாரை இடைத்தரகர்களாக வைத்து நீததிக்குப்புறம்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதால் தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதை உணர்ந்து செயற்பட வேண்டியது அவசியமானதாகும்.

இலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைக் கலாசாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டதன் பின்னணியில் எல்லாம் பொலிசாரே இருந்து வருகிறார்கள். அதன் ஒரு அங்கமாக கனகராயன்குளத்தில் விருந்தினர் விடுதி நடாத்துவதற்காக தனது காணியை குத்தகைக்கு கொடுத்திருந்த முன்னாள் போராளியான குடும்பஸ்தரும் அவரது மனைவி மற்றும் மகளும் பொலிஸ் பொறுப்பதிகாரியால் தாக்கப்பட்டுள்ளதற்கு எமது வன்மையான கண்டனங்கள் .

பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

SHARE