உதைபந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த ‘கீரின் லைட் கழகம்’ சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது

24
மாவட்டங்களுக்கிடையில் நடைபெற்ற ‘சமுதாய ஒற்றுமைக் கிண்ணம்’ உதைபந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த ‘கீரின் லைட் கழகம்’ சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, அனுராதபுரம், மாத்தளை மற்றும் பொலநறுவை மாவட்டங்களை சேர்ந்த ஆறு மாவட்டங்களுக் கிடையில் நடைபெற்ற கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு நாவற்குடாவை சேர்ந்த ‘கீரின் லைட் கழகம்’ சம்பியன் பட்டத்தை வென்று மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்துள்ளது.
திருகோணமலை விபுலானந்தா கல்லூரி விழையாட்டரங்கில்; (08) அன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அனுராதபுரம் கஸ்தூரி விழையாட்டுக்கழகத்தை எதிர்த்து விழையாடிய ‘கீரின் லைட் கழகம்’ 3-5 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நடப்பாண்டு சம்பியன் பட்டத்தை தனதாக்கியுள்ளது.
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேசசபை தலைவர் ஜி.ஞானகுணாளன் பிரதம விருந்தினராகவும், மாத்தளை மாநகர பிரதி மேயர் எஸ்.பிரகாஸ், சம்மாந்துறை பிரதேச சபை உப தலைவர் வி.ஜெயச்சந்திரன், திருகோணமலை நகராட்சிமன்ற உறுப்பினர் வி.ராஜ்குமார் மற்றும் திருகோணமலை பிரதேச சபை உறுப்பினர் கெ.விஜியகமார் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டிருந்தனர்.
SHARE