கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாமா? என சந்தேகத்தை ஏற்படுத்திய மனித எச்சம் 

23
(மன்னார் நகர் நிருபர்)
மன்னார் சதோச வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தோகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் தொடர்சியாக மீட்கப்பட்டுவருகின்றது.
மன்னார் மவட்ட நீதமன்ற  நீதிபதி ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக போராசிரியர் தலைமையில் மன்னார் சதோச வளாகத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றும் புதிதாக அடையாளப்பபடுத்தப்படும் மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் மற்றும் ஆய்வு செய்யும் பணி இடம் பெற்றுவருகின்றது.
இந் நிலையில் நேற்றைய தினம் அகழ்வு பணியின்போது கை கால்கள் கட்டப்பட்ட நிலையையில் புதைக்கப்பட்டிருக்களாமான என சந்தோகத்தை ஏற்படுத்தகூடிய மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டிருந்தது கைகள் இரண்டும் நெருக்கமாக பிணைக்கப்பட்ட நிலையிலும் கால்கள் இரண்டும் ஒன்றுக் கொன்று குறுக்காக பினணக்கப்பட்டவிதத்திலும் மிகவும் நெருக்கத்துக்குள் புதைக்கப்பட்டவிதமாக காணப்பட்டது.
குறித்த மனித எச்சம் கை கால்கள் கட்டப்பட்ட நிலையையில் புதைக்கப்படதா அல்லது மத சடங்குகளின் அடிப்படையில் புதைக்கப்பட்டதா என்பது தொடர்பாக எந்தவித ஊகிப்புக்களும் தற்போது மேற்கொள்ள முடியவில்லை என்றாலும் இதுவரை மீட்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் அவை புதைக்கப்பட்ட நிலை ழூலமாக குறித்த மனித உடல்கள் சாதரண நிலையில் புதைக்கப்பட்டவை என நிச்சயம் ஏற்றுகொள்ள முடியாத விடயமாக காணப்பட்டலும் இறுதிகட்டட பரிசோதனையின் பின்னரே உண்மை உலகரியும் அதுவரை மன்னார் புதைகுழி புதைக்கப்பட்ட தேடலாகவே தொடரும்.
SHARE