திரிஷாவுக்கு மார்ச்சில் டும் டும் ரகசிய ஏற்பாடுகள் நடக்கிறது 

95
2002ம் ஆண்டு ‘லேசா லேசா’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான திரிஷா திரையுலகில் முழுசாக 12 ஆண்டு நிறைவு செய்திருக்கிறார். வெற்றி, தோல்வி பலவற்றை பார்த்தவர். சர்ச்சைகளில் சிக்கி மீண்டதற்கும் பஞ்சமில்லை. தற்போது பட அதிபர் வருண் மணியனுடன் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து இருவரும் தனி விமானத்தில் ஆக்ரா சென்று தாஜ்மஹால் அழகை கண்டு ரசித்தனர். விரைவில் திரிஷா நடித்திருக்கும் ‘பூலோகம்‘ , ‘என்னை அறிந்தால்‘ படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. தற்போது புதிய படங்களை ஒப்புக்கொள்ளாமல் இருக்கும் திரிஷாவுக்கு திருமண நேரம் நெருங்கிவிட்டதாக அவர் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரும் மார்ச் மாதம் திரிஷாவின் திருமணத்துக்கான தடபுடல் ஏற்பாடுகளை அவரது தாயார் உமா ரகசியமாக செய்து வருகிறாராம். உறவினர்கள், நண்பர்கள், திரையுலகினர் என எல்லோர் முன்னிலையிலும் திரிஷாவின் திருமணத்தை டாம்பீகமாக நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. புத்தாண்டு தினத்தில் தனது ரசிகர்களுக்கு இணைய தள டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியிருக்கும் திரிஷா,‘என்னுடைய டுவிட்டர் டார்லிங் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். என்னை அறிந்தால் பட டிரைலரை பார்த்து நீங்கள் தந்த கமென்ட் சந்தோஷம் அளிக்கிறது. இந்த ஆண்டு மிகச்சிறந்த ஆண்டாக இருக்கும்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

 

SHARE