தொழிற்சாலையொன்றில் நச்சுவாயு கசிவு: 5 பேர் வைத்தியசாலையில் ..!

49

ஹொரணை – வஹவத்த பிரதேசத்தில் உள்ள றப்பர் தொழிற்சாலையில் அமோனியா நச்சுவாயு கசிந்ததில் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதுடன், பாதிக்கப்பட்ட 5 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

SHARE