நாய்கள் கூட சாப்பிட முடியாத முந்திரியை சாப்பிட்டுக்காட்டிய நாமல்

நேபாளத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் இந்தியா ஊடாக இலங்கை வரும் போது நாய்கள் கூட சாப்பிட முடியாத வகையிலான முந்திரி பருப்புகள் தனக்கு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.

எனினும் ஜனாதிபதியின் இந்த கூற்றை பொய்யாக்கும் வகையில் நாமல் டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

இந்தியாவிலிருத்து இலங்கைக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

விமானம் மூலம் வரும் போது, முந்திரி பருப்புக்களை உண்பது போன்ற புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.

அத்துடன், “அப்படி ஒன்றும் இந்த விதைகளில் இல்லை” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேபாளத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

விமானம் மூலம் இந்தியா ஊடாக இலங்கை வரும் போது நாய்கள் கூட சாப்பிட முடியாத வகையிலான முந்திரி பருப்புகள் எனக்கு வழங்கப்பட்டது.

மிருகங்கள் கூட சாப்பிட முடியாத முந்திரி பருப்பை இறக்குமதி செய்ய யார் அனுமதி வழங்கியது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.

இதையடுத்து தமது நிறுவனத்திற்கான முந்திரி பருப்பு வழங்குனரை மாற்றுவதற்கு  விமான சேவை நிறுவனம் தீர்மானம் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News