அமைச்சர் சரத்பொன்சேகாவின் கருத்து தொடர்பில் அதிருப்தியை வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

முன்னாள் இராணுவ தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தற்போதைய இராணுவ தளபதி குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் பதவியை வகித்து கொண்டு தற்போதைய இராணுவ தளபதிக்கு எதிராக குற்றம் சுமத்த அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த கருத்தை அமைச்சரவை உறுப்பினர்களும் ஆமோதித்துள்ளனர்.

அதேவேளை முன்னாள் இராணுவ தளபதியான, அமைச்சர் சரத் பொன்சேகாவின் கருத்து தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, அமைச்சர் சரத் பொன்சேகா பதவியில் இருந்து விலக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

About Thinappuyal News