அரை கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் திருகோணமலையில் நபரொருவர் கைது.

திருகோணமலை – கந்தளாய், ரஜஎல பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த நபர் ஒருவரை போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது ரஜஎல, கந்தளாய் பகுதியை சேர்ந்த 42 வயது நபரே அரை கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு எதிராக ஏற்கனவே கஞ்சா வைத்திருந்தமை தொடர்பான வழக்கொன்று கந்தளாய் நீதிமன்றில் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அவரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

About Thinappuyal News