அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களில் ஒருவர் சிங்களவர்.

35

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்றிருந்த 25 அகதிகளை அவுஸ்திரேலிய அதிகாரிகள் 11ஆம் திகதி இரவு நாடு கடத்தியிருந்தார்கள்.

இவர்களில் 9 பேர் யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஆண்கள் என முன்னதாக வெளியிடப்பட்ட செய்திகளில் இருந்து அறியமுடிந்தது.

எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் பல விடயங்கள் தற்போது வெளிவந்துள்ளன. இந்த நாடு கடத்தல் தொடர்பாக த கார்டியன் ஊடகம் ஆராய்ந்துள்ளது.

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த ஈழத்தமிழர்களையும், ஒரு சிங்களவரையும் அந்த நாட்டு அரசு நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

11ஆம் திகதியன்று அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரத்திலிருந்து தனி விமானம் மூலம் இவர்கள் அனைவரும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர், சுமார் 6 ஆண்டுகளாக தடுப்பு முகாமில் இருந்துள்ளனர்.

இதில் சிலரின் தஞ்சக்கோரிக்கை வழக்கு நிலுவையில் இருந்து வந்த போதும், இவர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு நாடு கடத்தப்பட்ட பலர் தாங்கள் இலங்கை படைகளினால் சித்திரவதைக்கு

உள்ளாக்கப்பட்டதையும், கடத்தப்பட்டதையும் அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் தெரிவித்திருந்ததாக கார்டியன் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான நாடு கடத்தல் நடவடிக்கைகள் சர்வதேச விதியின் அடிப்படையிலேயே எடுக்கப்படுவதாக அவுஸ்திரேலிய அரசு தொடர்ந்தும் தன்னை நியாயப்படுத்தி வருகின்றது.

மேலும், அவுஸ்திரேலிய அரசு தரப்பிலிருந்து தற்போது நாடு கடத்தியவர்கள் குறித்து எந்த விரிவான தகவலும் வெளியிடவில்லை. என்றும் அவுஸ்திரேலிய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

SHARE