வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்களுக்கு நீரை பெற்றுக் கொடுக்க மாற்றுவழி

வவுனியா, தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு கிணற்றிலிருந்து பெற்று வழங்கப்பட்டு வந்த நீருக்கு பதிலாக மாற்றுவழிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியுடனான காலநிலை காரணமாக ஆறு, குளம், கிணறு என்பவற்றில் நீர் வற்றிப்போயுள்ளதாகவும், இதையடுத்து மாணவர்கள் தமது தேவைகளுக்காக பயன்படுத்தும் நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பாடசாலையின் அதிபரிடம் இந்த விடயம் தொடர்பாக வினவிய போது,

தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு தற்போது கிணற்றில் தண்ணீர் வற்றிப்போயுள்ளது.

எனினும் மாற்றுவழிகள் மேற்கொள்ளப்பட்டு மாணவர்களுக்கு தடையின்றி நேற்று முதல் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றதாக குறிப்பிட்டுள்ளார்.

 

About Thinappuyal News