ஜனாதிபதியை வீட்டிலிருந்து உணவு கொண்டு செல்லுமாறு கூறும் எம்.பி

ஜனாதிபதி அலரிமாளிகையில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு செல்லும் போது வீட்டிலிருந்து உணவுகளை எடுத்துச் செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பாதுகாப்பு அமைச்சராக இருக்கிறார். இந்த நிலையில் பாதுகாப்பு அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இது விஷம் கொடுக்கும் செயற்பாட்டிற்கு ஒப்பானதாகும். இதனாலேயே ஜனாதிபதியான பாதுகாப்பு அமைச்சரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அலரிமாளிகையில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளில் பங்கேற்பதாக இருப்பின் வீட்டிலிருந்து உணவுகளை எடுத்துச் செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எப்போதும் சமாதான முறை ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் போது மக்களுக்கு விஷம் கொடுத்து ஆபத்து விளைவித்தது கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

About Thinappuyal News