விஜய் மல்லையா லண்டன் தப்ப போகிறார் என்பது இவர்களுக்கு மட்டும் முன்னரே தெரியும்.

44

விஜய் மல்லையா லண்டன் செல்வதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே அந்த விடயம் இந்தியாவில் உள்ள பாஜக அரசுக்கும், ஸ்டேட் பேங்க் வங்கி இயக்குனருக்கும் தெரியும் என்று மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த்தாவே தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள பல வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்த தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பி சென்றார்.

விஜய் மல்லையா இந்தியாவை விட்டு வெளியேறும் முன் இந்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை பார்த்ததாக சமீபத்தில் கூறியது சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் இது குறித்து பேசிய உச்சநீதிமன்ற வழக்கறிஞர் துஷ்யந்த்தாவே கூறுகையில், மல்லையா லண்டன் போகவுள்ளார் என முன்பே தெரியும்.

இதையடுத்து எஸ்பிஐ வங்கி இயக்குனரையும், மத்திய அரசின் அதிகாரிகளையும் அணுகி மல்லையா வெளிநாடு செல்ல உள்ளார், அதை தடுக்கும்படியும் கூறினேன்.

அதேபோல் மறுநாள், நான் உங்களுக்காக வழக்கில் ஆஜராகிறேன் என எஸ்பிஐ இயக்குனரிடம் கூறினேன்.

அதற்கு எஸ்பிஐ அதிகாரிகள் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மறுநாள் நீதிமன்றம் பக்கமே வரவில்லை.

இந்த நிலையில் தான் மல்லையா லண்டனுக்கு பறந்தார்.

அப்போதே தான் சொன்னதை கேட்டு இருந்தால் மல்லையா தப்பித்து இருக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.

SHARE