அல்ஜீரியர்கள் சித்திரவதை குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி வெளியிட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உண்மை

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அல்ஜீரியர்கள் சித்திரவதை செய்யப்பட்டது உண்மைதான் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உண்மையைக் கூறியுள்ளார்.

அல்ஜீரிய சுதந்திரப் போராட்டத்தின்போது அல்ஜீரியர்கள் பிரான்ஸ் வீரர்களால் சித்திரவதை செய்யப்பட்டது குறித்து இதற்கு முன்னிருந்த பிரான்ஸ் நாட்டுத் தலைவர்கள் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் முதன்முறையாக பிரான்ஸ் ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

பிரான்சிடமிருந்து விடுதலை பெறுவதற்காக அல்ஜீரியர்கள் போராடும்போது 1954க்கும் 62க்கும் இடையில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான அல்ஜீரியர்கள் உயிர்த்தியாகம் செய்தார்கள்.

அந்த காலகட்டத்தில், பல அல்ஜீரியர்கள் சித்திரவதை செய்யப்பட்டதை பிரான்ஸ் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

அல்ஜீரிய சுதந்திரப் போராட்டத்தின்போது காணாமல் போனதாக கூறப்படும் சுதந்திரப் போராட்ட வீரரான Maurice Audin, உண்மையில் பிரான்சில் சித்திரவதைக்கு ஆளாகி உயிரிழந்தார் என்று இமானுவல் மேக்ரான் நேற்று தெரிவித்தார்.

Audinஇன் மனைவியை நேற்று சந்தித்த மேக்ரான், காணாமல் போன பிரான்ஸ் மற்றும் அல்ஜீரிய வீரர்கள் தொடர்பான விசாரணை ஒன்று தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடவும் இருக்கிறார்.

நான் செய்யும் ஒரே விடயம், உண்மையை ஒப்புக் கொள்வதுதான் என்று மேக்ரான் Audinஇன் மனைவியான Josette Audinஇடம் தெரிவித்தார்.

இதுவரை பிரான்சில் தலைவர்களாக இருந்தவர்கள் எல்லாம் அல்ஜீரிய வீரர்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் விடயம் குறித்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் முதன்முறையாக இமானுவல் மேக்ரான் அப்படி ஒரு விடயம் நடந்தது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டுள்ளது மிக முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாக கருதப்படுகிறது.

About Thinappuyal News