பைரவாவை விட சீமராஜா தமிழக வசூல் அதிகமா? அதிர்ந்த ரிப்போர்ட்

தளபதி விஜய் தான் இன்று தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னன். இவர் நடிப்பில் வெளிவந்த மெர்சல் தமிழகத்திலேயே ரூ 125 கோடி வசூல் செய்தது.

முதல் நாள் மட்டுமே ரூ 22 கோடி வசூல் செய்து இன்று வரை முதலிடத்தில் உள்ளது, ஆனால், அவரின் பைரவா படம் தயாரிப்பாளர் தரப்பில் ரூ 16 கோடி வசூல் என கூறப்பட்டாலும், விநியோகஸ்தர்கள் தரப்பில் ரூ 12.5 கோடி தான் வசூல் என்றனர்.

இந்நிலையில் இன்று சீமராஜா படத்தின் தமிழக முதல் நாள் வசூல் தயாரிப்பாளரே ரூ 13.5 கோடி என தெரிவித்துள்ளார். இதை விநியோகஸ்தர்கள் ஆம் என்றால், பைரவா முதல் நாள் வசூலை சீமராஜா முறியடித்துவிட்டது என்பது உறுதியாகிவிடும். இதுவரை யாரும் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

About Thinappuyal News