கூட்டு முயற்சியால் மெர்சல் சாதனையை முறியடித்த சூப்பர் ஸ்டார்

38

மெர்சல் தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து பிரமாண்ட ஹிட் அடித்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது.

சுமார் ரூ 250 கோடி வரை வசூல் செய்த மெர்சல், டீசரிலும் செம்ம சாதனை ஒன்றை நிகழ்த்தியது, ஆம், மெர்சல் டீசர் ஒரே நாளில் 10 மில்லியனுக்குள் மேல் ஹிட்ஸை அடித்தது.

இந்நிலையில் நேற்று 2.0 டீசர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளிவர, இவை அனைத்தும் சேர்த்து 24 மில்லியன் ஹிட்ஸை ஒரே நாளில் கடந்துள்ளது.

இதன் மூலம் சூப்பர் ஸ்டார் மெர்சல் சாதனையை முறியடித்துள்ளார், மேலும், மெர்சல் தமிழ் மட்டுமே வந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE