சிவகார்த்திகேயனுக்கு அஜித் சொன்ன அட்வைஸ், இன்று வரை கடைப்பிடிக்கின்றாராம்

அஜித் தமிழ் சினிமாவில் பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவரை பல இளம் நடிகர்கள் பாலோ செய்கின்றனர்.

இதை அவர்கள் நேரடியாகவே கூட கூறியுள்ளனர், இந்த நிலையில் சிவகார்த்திகேயன் சீமராஜா ப்ரோமோஷனில் அஜித் குறித்து பேசியுள்ளார்.

இதில் இவர் கூறுகையில் ‘நான் அஜித் சாரை சந்திக்கும் போதெல்லாம் ஒரு எனர்ஜி கிடைக்கும், அவரை அடிக்கடி சந்திக்க மாட்டேன்.

ஆனால், சந்திக்கும் போது பல அட்வைஸுகளை வழங்குவார், அதில் ஒன்று ஒழுங்காக வரியை கட்ட வேண்டும் என்று அவர் கூறினார்.

அதனால் இன்று வரை நான் சரியாக வரியை கட்டி வருகின்றேன்’ என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

About Thinappuyal News