கோப் குழு கூட்டங்களில் ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி

நாடாளுமன்றத்தின் பொதுநிறுவனங்கள் நிலைக்குழு மற்றும் கணக்கீட்டுக்குழு கூட்டங்களில் எதிர்வரும் நாட்களில் ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படவுள்ளது.

அத்துடன் குறித்த குழுக்கள் தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தனியான தகவல் அதிகாரியொருவரும் நியமிக்கப்படவுள்ளார்.

இதற்கான சட்டஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகளுக்கான சட்டமூலம் விரைவில் திருத்தம் செய்யப்படவுள்ளது.

அதற்கான சட்டமூலத்தை உருவாக்குவதற்கான வரைபு தற்போதைக்கு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.

About Thinappuyal News