கிளிநொச்சியில் உரம் களஞ்சியப்படுத்த முடியாத நிலை

கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக செய்கையின் போது உரம் களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடிய களஞ்சிய வசதியில்லாத நிலை காணப்படுவதாக மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயகுலன் தெரிவித்துள்ளார்.

மானியம் வழங்குவது குறித்து விவசாயிகள் வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,“காலபோகத்தின் போது விவசாயிகளுக்கு வழங்குவதற்கு 8000 மெற்றிக்தொன் உரம் தேவைப்படுகின்றது. இவ்வாறு தேவையான உரத்தினை களஞ்சியப்படுத்தக்கூடிய போதிய களஞ்சிய வசதிகள் இல்லை.

960 மெற்றிக்தொன் உரத்தினை களஞ்சியப்படுத்தக்கூடிய களஞ்சிய வசதிகள் மாத்திரமே உள்ளதாகவும், மேலதிக உரத்தினை களஞ்சியப்படுத்தக்கூடிய வசதிகள் இல்லை” எனவும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வருடாந்தம் காலபோகத்தின் போது பாரிய மற்றும் நடுத்தர சிறுகுளங்கள் மானாவாரிப்பயிர் செய்கை நிலங்கள் உள்ளடங்கலாக சுமார் 59,000 முதல் 60,000 ஏக்கர் வரையான நிலப்பரப்பில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பயிர் செய்கையின் போது விவசாயிகளுக்கான மானிய உரம் கமநலசேவை நிலையங்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மாவட்டத்திற்கு தேவையான உரத்தினை களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடிய போதிய களஞ்சிய வசதிகள் இல்லாத காணப்படுகின்றது“ என குறிப்பிடப்படுகிறது.

About Thinappuyal News