வடக்கில் மூடப்பட்ட கிணறுகளை தோண்டுங்கள்! விஜயகலாவின் மற்றுமொரு கருத்து

காணாமல் போனவர்கள் குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கில் மூடப்பட்ட கிணறுகளை தோண்டினால் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க முடியும் என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக விடுதலைப்புலிகள் தொடர்பில் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்தால் அவர் பெரும் சிக்கல்களுக்கு முகங்கொடுத்து தனது, இராஜாங்க அமைச்சு பதவியையும் இழந்து, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு சென்றுள்ளது.

இந்த நிலையில் கிணறுகளை தோண்டினால் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க முடியும் என விஜயகலா கூறியுள்ள கருத்து தென்னிலங்கையில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News