நாட்டை ராஜபக்சவினருக்கு உரிமையாக்க மகிந்த முயற்சித்து வருகிறார்.-அமைச்சர் சஜித் பிரேமதாச

60

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேசப்பற்று என்ற தோளில் ஏறி ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய பதவி நாற்காலிகளை பெற்றுக்கொண்டு ராஜபக்ச குடும்பத்திற்கு நாட்டை உரிமையாக்க முயற்சித்து வருவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அம்பாறை ஜெயந்திபுர பிரதேசத்தில் நடைபெற்ற கிராம உதயம் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 124வது கிராமத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சஜித் பிரேமதாசவுக்கு 2030ம் ஆண்டு வரை உயர்ந்த இடத்திற்கு வர முடியாது என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் கூறுகின்றனர். அந்த பயணத்தை நான் ஏற்கனவே ஆரம்பித்து விட்டேன்.

அதனை 2025ம் ஆண்டு நிறைவு செய்வேன். நான் மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுப்பது பற்றி கூறுகிறேன். கூட்டு எதிர்க்கட்சியின் எதனை நினைக்கின்றனர். அலரி மாளிகை பற்றியும் ஜனாதிபதி மாளிகை பற்றியும் நினைக்கின்றனர்.

கூட்டு எதிர்க்கட்சியில் இருக்கும் புத்திசாலிகளுக்கு தற்போது புரிய ஆரம்பித்து விட்டது. ராஜபக்சவினர் மட்டுமா ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகிக்க முடியும்.

சாதாரண மனிதனுக்கு கீழ் மட்டத்தில் சாதாரண நிலையில் இருந்து உயர்மட்டம் வரை செல்ல ஐக்கிய தேசியக்கட்சி மட்டுமே சக்தியை கொடுத்தது எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE