பாடசாலை நேரத்தில் இரு ஆசிரியைகள் மோதல்

12
(நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்  மு.இராமச்சந்திரன்) 
நுவரெலிய கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில்  இரு ஆசிரியைகளுக்கு  இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.  கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை நேரத்தில் பாடசாலை வகுப்பறையில்  இரு ஆசிரியைகள் மாணவர்களுக்கு மத்தியில்  மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
மோதல் சம்பவம் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா வலயக்கல்வி அதிகாரி தெரிவித்ததுடன், குறித்த ஆசிரியர்கள் இடையிலான தர்க்கத்தின் போது தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தனர்.
மேலும்  மோதலின் போது  நகம் கீரல், சிராய்வு  காயம் ஏற்பட்ட நிலையில் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்படி ஆசிரியர்கள் இருவருக்கும் இடையில் ஒழுக்காற்று விசாரணையின் இடம்மாற்ற செய்யவுள்ளதாக
கல்விக் காரியாலய அதிகாரிகள் தெரிவித்ததுடன், இரு ஆசிரியர்கள் முறைபாட்டுக்கமைய விசாரணை முன்னெடுக்கவுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
SHARE