கொழும்பை அலங்கரித்த கோடி ரூபா பெறுமதியான அதிநவீன கார்கள்!

13

கொழும்பில் ஒன்றுகூடிய அதிநவீன கார்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

பல கோடி ரூபா பெறுமதியான BMW i8 கார்கள் கொழும்பில் ஒரே நேரத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் குறைந்த அளவிலேயே உள்ளதாக கருதப்படும் BMW i8 கார்கள் எட்டு ஒன்றாக கொண்டு வரப்பட்டுள்ளன.

கோடி ரூபா பெறுமதியான இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தை ஒரே நாளில் கொழும்பிற்கு ஓட்டி வந்து ஒன்றாக இணைந்துள்ளனர்.

தங்கள் வாகனங்களின் அழகை புகைப்படம் எடுப்பதற்காகவே இந்த வாகனங்கள் ஒரு இடத்தில் கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபல கிரிக்கெட் வீரர் லசித் மாலிங்கவும் தற்போது BMW i8 காரினை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE