கோர விபத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலி

16

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து பாதெனிய வீதியின் கலகமுவ பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள், கெப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதில் தம்புத்தேகம மற்றும் அனுராதபுரம் பொலிஸ் நிலையங்களில் சேவையாற்றும் இருவரே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

SHARE