குடியிருப்பு பிரதேசத்தில் மீண்டும் அரிசி ஆலையா ? மக்கள் மத்தியில் பதற்றம்

106

மத்திய முகாம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 12 ஆம் காலனியில் மக்கள் குடியிருப்பு பிரதேசத்தில் மூடப்பட்ட அரிசி ஆலையை மீள திறப்பதற்கு முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன.

மக்கள் குடியிருப்பு பிரதேசங்களில் அரிசி ஆலைகள் இயங்க முடியாது. சட்டம் இதை அனுமதிக்காது. ஏனென்றால் சுற்றாடல், ஒலி ஆகியன மாசடைந்து விடும். அத போல சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் முன்பு மூடப்பட்ட அரிசி ஆலையை மீள திறக்க நாவிதன்வெளி பிரதேச சபை தலைவர் அடங்கலாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதி வழங்கக் கூடாது என்று குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக பிரதேச சபை, சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை, பிராந்திய சுகாதார பணிமனை, பிரதேச செயலகம் ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகளுக்கு எழுத்துமூல வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SHARE