வவுனியா பிரதேச சபை அமர்விற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

107

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஆறாவது அமர்வு இன்று காலை 10 மணிக்கு பிரதேச சபைத்தலைவர் துரைசாமி நடராஜசிங்கம் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

இதில் கலந்துகொண்டு மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்கு சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு சபைத்தலைவரினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊடகவியலாளர்கள் தமது பணிகளை மேற்கொள்வதற்கு சபைத்தலைவரினால் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் மக்களின் அபிவிருத்தி தொடர்பாக செய்திகளும் வெளிக்கொண்டுவரப்படவில்லை.

இது தொடர்பாக பிரதேசபைத்தலைவர் இது எமது சபையின் குடும்பவிடயங்கள் இங்கு இடம்பெறும் விடயங்களைத்திரிவு படுத்தி எழுதிவிடவேண்டாம் என்று தெரிவித்தே  செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மக்களினால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கிராமமட்டத்தில் பிரதேசசபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி தொடர்பான தகவல்களை வெளியே கொண்டுவருவதற்கு தயக்கம் காட்டிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE