“அநுராதபுரத்துக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல்”

26

வரட்சியான காலநிலை காரணமாக அநுராதபுரம், நுவரவாவியின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதால் அநுராதபுரம் நகருக்கு குடிநீரை வீநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அநுராதபுரத்திலுள்ள பொது மக்கள், போதனா வைத்தியசலைகள், இராணுவ முகாம்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் குடிநீரை தடையின்றி வழங்க வேண்டியுள்ளதனால், போதிய நீரை மகாவலியிலிருந்து நுகரவாவிக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றது.

ஆகவே நிலவும் வரட்சியான கலாநிலையை கருத்திற் கொண்டு பொது மக்கள் நீ‍ரை வீண் விரயம் செய்யாது சிக்கனமாக பயன்படுத்துமாறும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை கேட்டுக் கொண்டுள்ளது

SHARE