மன்னார் கீரி கடற்கரையில் இடம் பெற்ற கரையோரத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம்

41
(மன்னார் நகர் நிருபர்)
 
ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக  பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய கரையோரக் கடல் வளங்களைப் பேணும் வாரமும், கரையோரத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டமும் இன்று செவ்வாய்க்கிழமை(18) காலை மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மன்னார் கீரி கடற்கரை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது மன்னார் மாவட்டச் செயலக பணிமனை உத்தியோகத்தர்கள்,இராணுவத்தினர்,பொது மக்கள் உற்பட பவர் இணைந்து குறித்த கடங்கரை பகுதியில் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதன் போது கீரி கடற்கரை ஓர பகுதிகளில் காணப்பட்ட சகல விதமான கழிவுப்பொருட்களும் அகற்றப்பட்டதோடு,மன்னார் நகர சபையின் கழிவு அகற்றும் வாகனங்களில் அவற்றை சேகரித்தனர்.
குறித்த நிகழ்வில் மன்னார் நகர சபையின் செயலாளர்,கிராம அலுவலகர்கள் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த செப்டெம்பர் 15 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரையிலான ஒரு வார கரையோர பாதுகாப்பு வாரத்தின் போது கடற்கரைகள் மற்றும் கடல் சார் சூழலை தூய்மைப்படுத்தும் சுமார் நூறு செயல்திட்டங்கள் நாட்டைச் சூழவுள்ள சுமார் 14 கரையோர மாவட்டங்களில் கடல் சார் சூழல் அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
SHARE