மகள் இறந்த மறுநாளே உயிரிழந்த தாய்.. பிரித்தானியாவில்

70

பிரித்தானியாவில் விபத்தில் சிக்கி இறந்த மகளுக்கு அஞ்சலி செலுத்திய அடுத்த 1 மணி நேரத்தில், தாய் உயிரிழந்துள்ள சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த Casey Hood என்ற 18 வயது இளம்பெண், தன்னுடைய தோழி Lucy Leadbeater என்ற 27 வயது பெண்ணுடன் கடந்த வெள்ளிக்கிழமையன்று காரில் சென்றுள்ளார்.

அப்பொழுது மற்றொரு காரில் வந்த இரண்டு இளைஞர்கள் விபத்து ஏற்படுத்தியதில், Casey சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து விரைந்த வந்த பொலிஸார் கவலைக்கிடமான நிலையில் இருந்த Lucy-ஐ மீட்டு லண்டன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு Lucy-க்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கிடையில் அன்றைய தினம் இரவே விபத்து ஏற்படுத்திய இரண்டு இளைஞர்களை பொலிஸார் அடையாளம் கண்டனர். அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் மகள் இறந்த துக்கம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த Casey-யின் தாய் Natalie Hood, தன்னுடை முகநூல் புத்தகத்தில், ‘என்னுடைய மகள் எனக்கு திரும்ப வேண்டும்’ என பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவு வெளியான அடுத்த ஒரு மணிநேரத்தில் Natalie வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இந்த சோக சம்பவம் குறித்து Natalie-வின் உறவினர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த Lucy-ம் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

SHARE