ஈரானில் இருந்து தருவிக்கப்பட்ட மசகு எண்ணெய் இறக்குமதி நிறுத்தம்

18

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் பொருளாதார தடை அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த நாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட மசகு எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.

வோசிங்டன் போஸ்ட் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் தகவல்படி இலங்கை ஈரானிடம் மசகு எண்ணெய்யை கொள்வனவு செய்யவில்லை.

சிங்கப்பூரிடம் இருந்தே மசகு எண்ணெய்யை கொள்வனவு செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அணுவாயுத உடன்படிக்கையை மீறியதாக கூறியே அமெரிக்கா ஈரானுக்கு எதிராக பொருளாதார தடையை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE