கனடாவில் திருடப்பட்ட காரின் உள்ளே இருந்த சிறுவனின் நிலை என்ன?

109

கனடாவில் திருடப்பட்ட காரின் உள்ளே இருந்த சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டதுடன், காரும் கைப்பற்றப்பட்டது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Fort Macleod நகரில் உள்ள ஒரு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென திருட்டு போன நிலையில் பொலிசிடம் புகார் கொடுக்கப்பட்டது.

காரின் உள்ளே ஆறு வயது சிறுவன் இருந்ததும் தெரியவந்தது.

இது குறித்து விசாரணையை தொடங்கிய பொலிசார் கார் காணாமல் போன சில மணி நேரங்களிலேயே அதை கண்டுப்பிடித்தனர்.

இதோடு, கார் உள்ளே இருந்த சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றத்தில் ஈடுபட்ட நபர்களின் விபரங்களை பொலிசார் வெளியிடவில்லை.

SHARE