இறந்துகிடந்த இளம்பெண் உள்ளாடையில் இருந்த டொலர்கள்

126

இந்தியாவின் பெங்களூரில் மர்மமான முறையில் பெண் இறந்துகிடந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கணவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவினாஷ் அகர்வால் என்ற மருத்துவர் தனது மனைவி சோனா அகர்வாலுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஞாயிறு மாலை சோனா தனது அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

சோனாவின் உடலை பரிசோதனை செய்தபோது அவரது உள்ளாடையில் அமெரிக்க டொலர்கள், வீட்டு சாவி, தங்க நகைகள் இருந்தன.

சம்பவம் நடந்த அன்று பக்கத்தில் வீட்டில் இருந்து சோனா வந்ததாக அந்த வீட்டில் வசிக்கும் பிரசாத் என்பவரின் மாமனார் கூறினார்.

அங்கிருந்து வெளியில் வந்தபோது தான் சோனா கீழே விழுந்து இறந்துள்ளார்.

இது குறித்து பக்கத்து வீட்டு நபரான பிரசாத் கூறுகையில், என் மனைவியும், சோனாவும் தோழிகள்.

சில நாட்களுக்கு முன்னர் எங்கள் வீட்டு சாவி தொலைந்துவிட்டது.

ஞாயிறு அன்று வீட்டு மொட்டையில் கெட் டூ கெதரை நாங்கள் கொண்டாடியபோது எனது மாமனார் எதேச்சியாக கீழே வந்துள்ளார்.

அப்போது சோனாவை அவர் பார்த்த நிலையில் அவர் மாடியிலிருந்து கீழே குதித்ததாக கூறினார்.

சோனா உள்ளாடையில் வீட்டு சாவி இருந்தது என கூறியுள்ளார்.

இதனிடையில் தனது மனைவி சோனா தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ கீழே குதிக்கவில்லை என கூறியுள்ள கணவர் அவினாஷ் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறியுள்ளார்.

இதையடுத்து பொலிசார் தங்கள் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

SHARE