மாரடைப்பினால் ஏற்படக்கூடிய புதிய அபாயம்

124

அண்மைய மருத்துவ ஆய்வுகள் மாரடைப்பு நோயானது ஒருவரில் மனநோய் தன்மையை இருமடங்காக்குகிறது என்கின்றன.

மாரடைப்பு நோயினை ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகள் மூலமாக அது ஏற்படும் வாய்ப்புக்களைக் குறைத்துக்கொள்ளலாம்.

இதே வாழ்க்கைமுறை மனநோய் தன்மை ஏற்படும் வாய்ப்பையும் தடுக்கக்கூடியது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

விஞ்ஞானிகள் உலகளவில் 3.2 மில்லியன் மக்கள் மீது மேற்கொண்டிருந்த 48 வெவ்வேறு ஆய்வுகளிலேயே இத் தகவல் அறியப்பட்டிருக்கிறது.

எனினும் மாரடைப்பால் அவதிப்படும் பெரும்பாலானோர் மனநோய் தன்மையைக் கொண்டிருப்பதில்லை.

எனவே மேலதிக ஆய்வுகள் மூலமே தெளிவான முடிவுகளை மேற்கொள்ளமுடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

SHARE