29 வயது மனைவிக்கு 62 வயது கணவரால் ஏற்பட்ட பரிதாபம்

51

ஹைதராபாத்தை சேர்ந்த பெண்ணுக்கு, ஓமனில் உள்ள கணவர் வாட்ஸ் அப் மூலம் முத்தலாக் கொடுத்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் உதவி கோரியுள்ளார்.

பாதிக்கப்பட்ட ஹுமா சைரா (29) என்ற பெண் கூறுகையில், 62 வயதான ஓமன் குடிமகனை கடந்தாண்டு மே மாதம் ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்டேன்.

பின்னர் ஓராண்டுக்கு ஓமனில் அவருடன் வசித்தேன்.

திருமணத்துக்கு பின்னர் எனக்கு குழந்தை பிறந்த நிலையில் உடல்நலக்குறைவால் மூன்று மாதத்தில் இறந்துவிட்டது.

இந்நிலையில் என்னை என் கணவர் மருத்துவ சிகிச்சைக்காக ஹைதராபாத்துக்கு அனுப்பினார்.

பின்னர் எனக்கு வாட்ஸ் அப் மூலம் முத்தலாக் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்னுடைய எந்த கேள்விக்கும் பதிலளிக்க அவர் மறுக்கிறார்.

இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தான் எனக்கு உதவவேண்டும் என கோரியுள்ளார்.

SHARE