யாழ். வீதி ஒழுங்குப் பிரச்சினை ; விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்

17

யாழ்ப்பாணத்தில் பிரதான வீதிகளில் 15 இடங்களில் வீதி ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளதாகவும், அவற்றை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியபோது அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டதாகவும் யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜயசுந்தர தெரிவித்தார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்த  அவர்,

யாழ்ப்பாணத்தின் போக்குவரத்து பிரச்சசினைகள் மற்றும் விபத்துகளை தடுப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு இருந்தேன்.

அதன்போது,  யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து நெரிசல்கள், விபத்துக்ளை கட்டுப்படுத்தும் நோக்கில் நாம் வீதி ஒழுங்கு தொடர்பாக  கலந்துரையாடினோம். முக்கிய வீதிகளில் உள்ள குறைபாடுகளை ஒளிப்படங்களின் ஆதரத்துடன் நாம் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.

எனவே அதிகாரிகள் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நான் நம்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

SHARE