எதிர்கட்சி தலைவரின் குலதெய்வ கோயிலில் ஜனாதிபதி?

24

திருகோணமலையில் இன்று நடைபெறவுள்ள சில உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி இன்று காலை திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலில் விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபடவுள்ளதாக தெரியவருகிறது.

எதிர்கட்சி தலைவரின் குலதெய்வ கோயிலான திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலுக்கு வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விசேட வரவேற்பினை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், ஜனாதிபதியுடன் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம், ஐ.நா தீர்மானம் மற்றும் புதிய அரசமைப்பு உருவாக்கம் உட்பட பல விடயங்கள் தொடர்பில் தனிப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், ஜனாதிபதியை வரவேற்பதற்காக நேற்று மாலையே எதிர்க்கட்சி தலைவர் கொழும்பிலிருந்து புறப்பட்டு திருகோணமலைக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE