லண்டனில் இந்திய குடும்பத்தை எரித்து கொலை செய்ய முயற்சி

114

லண்டனில் இந்திய குடும்பத்தை உயிரோடு எரித்து கொலை செய்ய‍ே முயற்சித்த கும்பலொன்றை தேடும் நடவடிக்கையில் அந் நாட்டு பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

லண்டனில், ஆர்பிங்டன் பார்க் உட்பார்க் பகுதியில் வசித்துவரும் இந்தியக் குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருந்தபோது அவர்களது வீட்டை ஐந்து இளைஞர்கள் கொண்ட கும்பல் ஒன்று தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதைக் கண்ட அயலிலுள்ளவர்கள் குறித்த குடும்பத்தரை எழுப்ப அவர்கள் வீட்டிலிருந்து உடனடியாக வெளியேறினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் வீட்டில் பரவிய தீயை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இது தொடர்பாக குறித்த குடும்பத்தின் தலைவர் மயூர் கார்லேகர் கூறும்போது,

“நாங்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் அயலவர்கள் உரிய வேளையில் தட்டி எழுப்பியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம். சரியான நேரத்தில் இந்த அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்பட்டது. நாங்கள் யாருக்கும் எந்த தீங்கும் செய்தது கிடையாது. வாழ்நாளில் எல்லோருக்கும் உதவிகள் செய்து வந்திருக்கிறோம். இந்த சம்பவம் எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்து உள்ளது” என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் சம்பவ இடத்தில் பதிவான சீ.சீ.டி.வி. காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

SHARE