புதியவகை போதைப்பொருளுடன் பாடசாலை மாணவர்கள் உட்பட 12 இளைஞர்கள் கைது

116

கல்முனை நீதி நிருவாகத்திற்குட்பட்ட எல்லைக்குள் புதிய வைகயான போதைப்பொருள் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை மாணவர்கள் உட்பட 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்திற்குள் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாவா மற்றும் கேரளா கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே இவர்கள்கைதாகியுள்ளனர். கைதானவர்களிடம் கைவிரல் அடையாளம் பெறப்பட்டு 9 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

கல்முனை நீதிவான் நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் கொண்டுவரப்பட்ட போதே இத்தீர்ப்பினை வழங்கினார்.

மருதமுனை-மத்திய முகாம்-சம்மாந்துறை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்படரவ்களாவர்.

கல்முனைப் பிரதேச மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதுடன் கடந்த மாதம் முதல் கைதுகளும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE