அஜித்திற்காக ரூ.6 கோடி செலவு செய்துள்ள பிரபல நடிகர்

19

அஜித்தின் விஸ்வாசம் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. படத்திற்கான முக்கிய காட்சிகள் எல்லாம் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள் அவ்வப்போது வெளியாகும் படப்பிடிப்பு தள காட்சிகளை பார்த்து சந்தோஷப்பட்டு வருகின்றனர்.

அஜித் என்ற மனிதருக்காக ரூ. 6 கோடி செலவு செய்துள்ளதாக கூறியுள்ளார் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே. சுரேஷ். இவர் நடித்து, தயாரித்து வரும் படம் பில்லா பாண்டி.

இப்படத்தில் அஜித்தின் தீவிர ரசிகராக நடித்துவரும் ஆர்.கே.சுரேஷ், அஜித் மீதான காதலை வெளிப்படுத்தவே ரூ. 6 கோடி செலவு செய்து இப்படத்தை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

SHARE