தமிழ்ஈழப்போராட்டத்தை காட்டிக்கொடுத்த துரோகிகள் கயவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது விடுதலைப்புலிகள் தொடர்பில் பேசுவதற்கு

54

தமிழ்ஈழப்போராட்டத்தை காட்டிக்கொடுத்த துரோகிகள் கயவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது விடுதலைப்புலிகள் தொடர்பில் பேசுவதற்கு கூட்டணி ஆனந்தசங்கரி,புளட்,ரெலோ,ஈ.பீ.ஆர்.எல்.எப்:,ஈ.பீடி.பி.,;,போன்ற சுயநலன்கொண்ட

இப்போதெல்லாம் தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் „தீர்வு-சமாதானம்“ குறித்து பற்பல அமைப்புகள் போராட வெளிக்கிடுகின்றார்கள்!இவர்களில் எவரெவர் உண்மையாக மக்களின் நலனில் அக்கறையோடு „பதாதகைகள்“தாங்குகிறார்கள்,குரலிடுகிறார்களென்பதை நாமறியோம்!பராபரமே!!!

எந்தக் குழுவுக்கு எவவெரவர் பின்னாலிருக்கிறார்-எந்தெந்த அரசுகள் இருக்கின்றெனவென்பதும் புரிந்துகொள்ள முடியாதிருக்கு.இன்றைய காலம் மிகவும் இருண்ட அரசியலையே எமக்கு வழங்கிக்கொண்டிருக்கு!இலங்கையிலிருந்து பெரும் அரச சார்பு ஊடகங்களான“ரூபவாகினி,வீரகேசரி,சூரியன் பண்பலை வானொலி“என்று கோதாவிலிறங்கி,நமது மக்களின் ஜனநாயகத்தில் கவனமாக இருக்கினமாம்!இவர்கள் ஜெனிவாவில் வந்திறங்கி இங்கிருக்கும் சில உதிரிக் குழுக்களினதும்,மற்றும் இலங்கை-இந்திய வால்பிடி,எடுப்பார் கைப்பிள்ளைக் குழுக்களினதும்“புலியெதிர்ப்பு“க் கோசங்களைக் காவிச் சென்று நமது மக்களுக்கு விடிவு தருவினமெண்டு பல ஊடகங்கள் புலம்பலாம்.

எங்கள் மக்களினது உண்மையான பிரச்சனை அன்னிய நாடுகளின் முற்றித்தில் இல்லைப் பாருங்கோ,அது இலங்கைப் பாராளுமன்றத்துக்கு வெளியிலேதான் கிடக்கிறது.நாங்கள் காலாகாலமாக ஏமாற்றப்பட்டு,போராடிச் செத்துக்கொண்டிருக்கும்போது எந்த நாயும் நம்மை ஏறெடுத்துப் பார்க்கவில்லை.மாறாகத் தமிழருக்குள் முரண்பாடை வளர்த்து,அங்கு தோற்றப்பட்ட,தோன்றிய இயக்கங்களை தத்தம் நாடுகளின் நலனுக்குப் பயன்படுத்தித் தமிழர்களின் உயிரோடு விளையாடிய இந்திய,இலங்கை மற்றும் அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் இப்போது தமிழருக்கு ஜனநாயகம் தேவையென்றும்,இஸ்லாமியத் தமிழருக்கு-இஸ்லாமியச் சிங்களவருக்குத் தனிப்பிரதேசம்-மாநிலமுண்டு என்றும,; கூடவே கிழக்காலே பிரித்து கிழக்குத் தமிழருக்கு நிம்மதி கொடுக்கவேண்டுமென்றும்,அதைப்போலவே மலையக மக்களுக்குமான பிரதிநித்துவம் என்றெல்லாம் கோசம் போடும் இந்த நாடுகள் அதை எதற்கு ஜெனிவாவில வந்து கத்தவேணும்? பேசாமல் இலங்கையரசிடமே சொல்லி,அதையதைச் செய்யவேண்டியதுதானே?
„ஆடான ஆடுகள் எல்லாம் குழைக்கு அழ,நொண்டி ஆடு எதற்கோ அழுததாம்!“ இதைப்போலத்தான் இந்த ரீ.பீ.சீ வானொலிக் கும்பலின்ர செயலும்.

இந்தப் படங்கள் கூறுவதென்ன?

இவர்களுக்குப் பின்னாலிருந்து எந்த நலன் இவர்களைப் போராடத் தூண்டுகிறது?

அப்பாவி மக்களின் „புலிகள்மீதான தார்மீகக் கோபத்தை“ தமகுச் சாதகமாகப் பயன்படுத்தமுனையும் இந்திய-இலங்கை மற்றும் அமெரிக்க,ஐரோப்பிய „கைக்கூலிகளான“அனைத்து „மக்கள் விரோதிகளும்“(புலித் தலைமை,கூட்டணி ஆனந்தசங்கரி,புளட்,ரெலோ,ஈ.பீ.ஆர்.எல்.எப்:,ஈ.பீடி.பி.,;மசிர் மட்டை மற்றும் ஜெயதேவன்,ராமராஜ்,போன்ற சுயநலன்கொண்ட கயவாளிகளும்) இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகச் செயற்படுகிறார்கள்.மக்களுக்கு விரோதமாகப் „புலித்தலைமை“ மட்டுமல்ல புலிகளிடம் பங்கு கோரும் இத்தகையப் பாசிச அரசுகளின் பாதந்தாங்கிளுமேதான் „தமிழ் மக்கள் எதிரிகள்“ என்பதை நாம் இனம் காணலாம்.

புலிகளுக்கு மாற்று,மண்ணாங்கட்டியென்று கதைவிடும் இந்தப் பாசிசக் கைக்கூலிகள் எமது மக்களின் நலனில் இவ்வளவு அக்கறைகொண்டு போராடுகினமாம்?அப்பாவி மக்களைப் ப+ண்டோடு இலங்கை-இந்திய இராணுவங்கள் வேட்டையாடியபோதும்-இன்று இராணுவ உயர்பாதுகாப்பு வலயமென்ற போர்வையில் தமிழரின் வாழ்வாதாரவுரிமையைப் பறிக்கும்போது, இந்தத் தெருக்கோசப் பேர்வழிகள் எங்கே போனார்கள்?ஏன் இலங்கையரசிடம் இராணுவத்தை வெளியேறும்படிக் கோருவதில்லை?எதற்காக மக்களின் உயிரோடு விளையாடிய சிங்களப்பாசிச அரசிடம் அடக்கி வாசிக்கின்றார்கள்?

நாம் ஒன்றைப் புரிந்து கொள்ளலாம்.இந்த ஜெனிவாவில் கோசம் போட்டவர்களின் பின்னால் இலங்கை-இந்தியத் தூண்டல் இருப்பதை.அப்பாவி மக்கள் இதுள்த் திரண்டு கோசமிட்டும் உள்ளார்கள்.அவர்கள்(மக்கள்) „இவர்களின்“ சதிக்குப் பலியாகியுமுள்ளார்கள்.

நாம் இன்னுமொன்றையும் தெரிந்துகொள்ளலாம்.அதாவது பக்கத்து நகருக்குப் புறப்படுவதற்கே பணத்துக்கு அந்தா,இந்தா என்ற நிலையில்,மாதக் கடைசியில் வயித்துக்கே புவாப் போடுவது கஷ்டமாகவுள்ள இந்தப் „புலப்பெயர்வு வாழ்வில“; நினைத்தவுடன் சுவிஸ்,பிரான்ஸ்,ஜெர்மனி…அங்கே,இங்கே என்று இந்தக் கோஷ்டிக்கு எப்படிப் பணம் புரளுகிறது?இப்பெடியெல்லாம் புலிகளால் மட்டுமேதான் செய்யமுடியும்.புலிகளுக்கு நிகராக எந்த மக்கள் நலன் அமைப்புகளும் செயற்பட முடியாது.அப்படியொரு மக்கள் நலன் அமைப்புகளும் நம்மிடம் இல்லை!ஆக மொத்தத்தில் பெரும் கைகள் போடும் எலும்பைக் கவ்விப் „போடும் கோசம்“ தமிழ் பேசும் மக்கள் நலனில் அக்கறைப்பட்ட கோசமல்லை.

இதை ஓங்கி அடிச்சுக் குத்திச் சொல்லுகிறேன்!

நாம் படும் பாட்டுக்குள்,எங்கள் வாழ்வை இன்னும் சிதைப்பதற்குத் துணைபோகும் இந்தக் கும்பல்களையும்(கூட்டணி ஆனந்தசங்கரி,புளட்,ரெலோ,ஈ.பீ.ஆர்.எல்.எப்:,ஈ.பீடி.பி.,;மசிர் மட்டை மற்றும் ஜெயதேவன்,ராமராஜ்,போன்ற சுயநலன்கொண்ட கயவாளிகளும்), புலிகளையும்(புலித்தலைமை) தமிழ்பேசும் மக்கள் இனம்கண்டு, இவர்களை நிராகரிக்கவேண்டும்.புலிகளிடம் பகிரங்கமாக அறைகூவி எதிர்ப்பைக்காட்டி, அவர்களை மக்கள் நலனுக்கேற்ற தீர்வுகளுக்குச் செல்லத் தூண்டிப் போராட்டத்தை அவர்களிடமிருந்து பறித்து, மக்களாகிய நாமே முன்னெடுக்கப்படவேண்டும்.புலிகளின் படையிலுள்ள எமது பாலகர்களின் படைப்பலத்தோடு நாமே போரை முன்னெடுக்கப்பட வேண்டும்.இலங்கையில் புதியஜனநாயகப் புரட்சி நிறைவடையும்வரை எமது போராட்டம் முடிவடைய முடியாது.நமக்கு நீதியான,நியாயமான,சமாதானமானதும்,இனங்களுக்குள் ஒற்றுமை நிலவக்கூடிய இலங்கையை உருவாக்குவதே எமது அவசியப்பணி.இது மக்களாகிய நம்மால்தான் முடியும்,இதைவிட்ட மற்றவெல்லாம் பொய்!அவை மக்களை அடிமை கொள்ளும் தந்திரமுடையவை.

எனவே புலிகளிடம்தான் நமது சக்திகள்,வளங்கள் இருப்பதால் நமுக்கும் புலிகளுக்குமே பேச்சு வார்த்தை ஆரம்பமாகவேண்டும்.அதாவது புலிகளிடமிருந்து நாம் போராட்டத்தை மாற்றியாக வேண்டும்.அது மக்கள் போராட்டமாக நகரவேண்டும்.அதை முன்னெடுப்பதும் புலிப்படையாகவே இருக்கும்.ஆனால் இந்த முறை ஒவ்வொரு தமிழ் மக்களுமே மக்கள் போராளிகளாகவும்,பெரும் படையணியை இயக்கும் தலைவர்களாகவும் „நாமே“ இருப்போம்.அங்கே தனிநபர் வழிபாடுகளுக்கமைந்த தலைமை இராது.இதுவே இனிவரும் காலத்தின் இலக்காகவும் இருக்கும்.

SHARE