புலிகளை பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்துமாறு வலியுறுத்தல்

80

விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்துமாறு புலம்பெயர் சிங்கள மக்கள் அமைப்பின் தலைவர் கலாநிதி நாலக கொடஹேவா வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுக்குச் சமாந்தரமான அரச சார்பற்ற அமைப்புகளின் அமர்வில் நேற்று கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் அமைப்பு இல்லை என்று காட்ட ஒரு சிலர் சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனிதஉரிமைகள் ஆணையத்தின் இலங்கை தொடர்பான முன்மொழிவுகளிலும் அரசாங்கம் சாராத ஆயுதக்குழுவாகவே அவர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்காரணமாக ஐ.நா. சபையின் 2006ஆம் ஆண்டு பொதுச் சபை தீர்மானத்தின் பிரகாரம் புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கு எதிராக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே புலிகள் பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட வேண்டும் அதற்கான முயற்சிகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கலாநிதி நாலக கொடஹேவா தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

SHARE