பஸ் மோதியதில் வயோதிப பெண் பலி

36

பதுளையில் தனியார் துறை பஸ்சொன்றில் மோதுண்ட வயோதிப பெண் ஒருவர் பலியான சம்பவம் இன்று முற்பகல் இடம் பெற்றுள்ளது.பதுளை – பசறை வழியில் இரண்டாம் மைல் கல்லருகே மேற்படி சம்பவம் இடம் பொற்றுள்ளது.

பதுளை- பசறை வழியின் ஜயகம என்ற இடத்தைச்  சேர்ந்த விமலாவதி என்ற 67 வயது நிரம்பிய வயோதிப பெண்ணே  தனியார் பஸ்சில் மோதுண்டு பலியானகியுள்ளார்.

பதுளையிலிருந்து எல்லேயராவை என்ற இடத்திற்கு சென்றுகொண்டிருந்த தனியார் துறை பஸ் பாதையில் சென்ற கொண்டிருந்த வயோதிப பெண் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.

குறித்த விபத்திற்கான காரணத்தை பொலிஸார் விசாரணையின் மூலம் மேற்கொண்டு வருவதுடன்,பஸ் சாரதியயும் கைது செய்துள்ளனர்.

குறித்த வயோதிப பெண்ணின் சடலம் சட்ட வைத்திய பிரேத பரிசோதனைக்காக பதுளை பொது ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.

SHARE