சட்டசிக்கல்களை தீர்த்தபின் மாகாண சபை தேர்தல்களை நடத்த பிரதமர் பணிப்பு

43

சட்ட சிக்கல்களை தீர்த்து வைத்த பின் ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தும்படி பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் முறை குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்று ராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.

எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதனால் இந்த நிலைமை உருவாகி உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மல்வத்துபீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு ஒன்று எட்டப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE